
Home Improvement Tips and Employment News" width="390" height="182" />
வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம். முதல் பட்டதாரி சான்றிதழ் யாரெல்லாம் வாங்கலாம், அதை எப்பொழுது வாங்க வேண்டும், முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க தவறியவர்கள் எப்பொழுது வாங்க முடியும், முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்குவதால் என்ன பயன் இருக்கிறது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
முதல் பட்டதாரி என்பது குடும்பத்தில் யார் முதலில் பட்டம் பெறுகிறார்களோ. அவரையே முதல் பட்டதாரி என்று கூறப்படுகிறது. முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அவர்களின் குடும்பத்தில் அப்பா அல்லது அம்மா அல்லது உடன் பிறந்தவர்கள் யாரும் டிகிரி படிக்கவில்லை என்றால் நீங்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் பெற முடியும். அப்படி யாராவது உங்கள் குடும்பத்தில் டிகிரி முடித்திருந்தால் உங்களால் முதல் பட்டதாரி சான்றிதழ் பெற முடியாது.
அதுமட்டுமில்லமல் உங்களின் தாத்தா, பாட்டி டிகிரி படித்திருந்தாலும் முதல் பட்டதாரி சான்றிதழ் பெற முடியாது. அதாவது, விண்ணப்பதாரர்கள் பட்டதாரி குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க கூடாது. அதேபோல் உங்கள் உடன்பிறந்தவர்கள் டிப்ளமோ (Diploma) படித்திருந்தாலும் உங்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் கிடைக்கும்.
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |